17 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

 
arrest

வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

30 Years On The Run, Criminal-Turned-Actor Arrested In Haryana: Police

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த  வெள்ளகுட்டை அம்பேத்கர் நகரை  சேர்ந்த  சஞ்சய் (21), பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர், வெள்ளகுட்டை அடுத்த நன்னேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை  காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார்  தன்னுடைய மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக ஆலங்காயம் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து பெண்ணை கண்டுபிடித்து  பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாத காரணத்தினால், சிறுமியை  மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார். பெண்ணை அழைத்து சென்ற வாலிபர் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வேலூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.