ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை - ரூ. 15 லட்சம் இழந்த விரக்தியில் விபரீத முடிவு
Wed, 11 Jan 20231673415447442

ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.
நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே சிவன்ராஜ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் ரூபாய் இழந்ததால் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டார். இவர் நேற்று மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்தை இழந்ததாக சிவராஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் உறவினர்களிடம் கடன் வாங்கிய பணத்தை இழந்தால் இளைஞர் சிவன் ராஜ் விபரீத முடிவு எடுத்துள்ளார் .
வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர் ஆன்லைன் ரம்மி மீதான மோகத்தால் உயிரை இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் ஆசதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.