மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

 
காளி

பல்லாவரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல்  சீண்டலில் ஈடுபட்ட  நபர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சார்ந்தவர் காளியப்பன் (வயது-22) இவர் திரிசூலம் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியினை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார். இவர் காளியப்பன் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த  11 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமியின் பெற்றோர் திடீரென வீட்டுக்கு வந்ததும் செய்வதறியாது தவித்த காளியப்பன், அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததும் உடனே தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காளியப்பனை கைது செய்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.