சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞர் கைது

 
rape

திருச்செந்தூர்  அருகே  குலசேகரபட்டினத்தில்  சிறுமியை  காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி  கர்ப்பமாக்கிய  இளைஞர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1,101 Raped Stock Photos and Images - 123RF

திருச்செந்தூர் அருகே குலசேகர பட்டினத்தை சேர்ந்த கந்தசாமி மகள் சுமதி (15). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது  உறவினரான திசையன் விளையை சேர்ந்த துரை மகன் வேம்பு ராஜா (24)-வை காதலித்துவந்தார். இவர்  சொந்தமாக  டிராவல்ஸ் ஒன்று  வைத்து நடத்தி வருகிறார். வேம்பு ராஜா தனது உறவினரான சுமதியை அடிக்கடி  தனிமையில் சந்தித்து பேசிவந்ததால்,  சிறுமி சுமதி கர்ப்பமடைந்து உள்ளார்.

இந்நிலையில்  7 மாதம் சுமதி கர்ப்பமான நிலையில், வேம்பு ராஜாவிற்கு  தருவை குளத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணம்  நிச்சயிக்கப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட சுமதி, தனது பெற்றோருக்கு  தனது காதல்  விவகாரத்தை  தெரியப்படுத்தியுள்ளார் . இதனை அடுத்து சுமதியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில்  இருவரிடமும்  விசாரணை நடத்தியதில்  சுமதியை வேம்பு ராஜா  காதலித்ததும் கர்ப்பமாக்கியதும் உண்மை என்பது தெரியவந்தது. அதன் படி   சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய வேம்பு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.