அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு! 2 கமாண்டர் உள்பட 31 போலீசார்

 
y

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்.

 தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக,  திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகிறார் அண்ணாமலை.   திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்களின் ஊழல் பட்டியை பட்டியல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.  மேலும் 13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல்  தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. 

 இதனால் திமுகவுக்கும் அண்ணாமலைக்குமான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.  

yy

 தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அண்ணாமலை புலிப்பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறார்.  இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

கோவை கார் குண்டுவெடிப்பில் அண்ணாமலை தான் முதலில் கருத்து தெரிவித்திருந்தார். அதன் பின்னரே போலீசாரி விசாரணையை தீவிர படுத்தினர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார்.  மேலும் 13 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாகவும் சொல்லி வருகிறார்.   இதனால் அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் சென்றிருக்கிறது. இதை அடுத்து அண்ணாமலைக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்து இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

 மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பை வழங்க இருக்கிறார்கள்.   அண்ணாமலையைச் சுற்றி ஒன்று அல்லது இரண்டு கமாண்டர் உள்பட மொத்தம் 31 போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.