மதுரை அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சை- குழந்தை உயிரிழப்பா?

 
மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளயம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் - கார்த்திகா என்பவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சு குழாயில் சுவாசிப்பு  பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஆண்டு நவ.2 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரு வருடம் கழித்து குழந்தைக்கு நாக்கில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பின்னர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும்போது சிறுநீர் குழாயில் பிரச்னை இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் நாக்கு மற்றும் சிறுநீர் குழாயையும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தைக்கு தவறுதலாக சிகிச்சை அளித்து விட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் அரசு மருத்துவமனை டீன் அறிக்கையின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், உணவருந்தி சாதரணமாக சிறுநீர் கழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.