உலகக் கோப்பை கால்பந்து- மூன்று மடங்கு அதிகரித்த முட்டை ஏற்றுமதி

 
e

உலகக் கோப்பை கால்பந்து போட்டியினால்  முட்டை ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. 

எ

 நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . இங்கிருந்து தான் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள்ம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது  

தற்போது கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியிருக்கிறது.  இதனால் நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு மூன்று மடங்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.

க

 நாமக்கல் மாவட்டத்திலிருந்து அதிக அளவில் முட்டை ஏற்றுமதி ஆகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.  கத்தார் நாட்டிற்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கால்பந்து போட்டியினால் 1. 50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.