திருவண்ணாமலையில் நித்தியானந்தாவின் முழு உருவ சிலைக்கு பெண்கள் பூஜை

 
Nithyananda

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தாவின் கைலாசா ஆசிரமத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆசிரம வாசலில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட நித்தியானந்தாவின் முழு உருவ சிலைக்கு பெண் சீடர்கள் மாலை அணிவித்து நெய் தீபம் செய்து மகாதீபாரதனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நித்தியானந்தரின் சீடர்கள் கிரிவலம் வரும் பக்தர்களை நித்தியானந்தாவின் தீட்சையை பெறுவதற்காக நான்கு இருக்கைகள் அமைத்து ஆண் சீடர்கள் தனியாகவும், பெண் சீடர்கள் தனியாகவும் அங்கு வரும் பக்தர்களின் தலையில் படிக லிங்கத்தை வைத்து உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் மன உளைச்சல்கள் அனைத்தும் தீரும் என்று சொல்லி திருநீர் இட்டு அவர்களிடம் நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள், உங்களது தொலைபேசி எண் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு உங்களுக்கு நித்தியானந்தரிடம் சீடர்களாகவும் பல்வேறு பணிகளில் ஈடுபட விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்கிறோம் என்று தீட்சையை பெறவருபவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நித்தியானந்தரின் முழு உருவ சிலைக்கு சிறப்பு பூஜை செய்து சீடர்கள் கிரிவலம் வரும் பக்தர்களின் தலையில் படிக லிங்கத்தை வைத்து ஆசை வார்த்தை கூறி சீடர்களாக பக்தர்களை சேர்ப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.