மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலி

 
death

கிருஷ்ணகிரி அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே செட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அம்சா. இவர் தனது வீட்டின் முன் உள்ள கம்பி வேலியில் துணிகளை துவைத்து உணரவைப்பது வழக்கம். அதன்படி அம்சா தனது வீட்டின் முன் உள்ள கம்பி வேளியில் துணிகளை துவைத்து உணர வைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது வீட்டின் முன் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து வேலியின் மீது விழுந்துள்ளது. இதனை அறியாத அம்சா உளர்த்திய துணிகளை எடுக்க கம்பி வேலியை தொட்ட பொழுது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் காவல்துறையினர் உயிரிழந்த அம்சா உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.