திருமணமான ஒரு வருடத்தில் 6 மாத குழந்தையை தவிக்கவிட்டு பெண் தற்கொலை

 
su

வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன ஒரு வருடத்தில்  பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  திருவாரூர் மாவட்டத்தில் இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

 அம்மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அடுத்த தானம் தாங்கி கிராமம்.   கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி வரம்பியம் ஊரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.   காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

rr

 திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் திடீரென்று காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .  திருமணமாகி ஒரு வருடத்திலேயே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 காயத்ரியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளனர் .  மகளின் கணவரும் மாமியாரும் சேர்ந்து தான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்கள் என்று போலீசில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளனர் .

இந்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியின் கணவர் பார்த்திபன் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.