ஸ்ட்ரைக் வாபஸ் - 8 நாளுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்!!

 
fisher

ராமேஸ்வரம் மீனவர்கள் 8  நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீண்டும் மீன் பிடித்து சென்றுள்ளனர்.

fisher

 

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த ஜூலை 20ஆம் தேதியன்று மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.  சில படகுகள் 2018 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாகவும், இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

arrest

இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8  நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீண்டும் மீன் பிடித்து சென்றுள்ளனர்.  இலங்கை கைது செய்த 8  மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  வாழ்வாதாரம்  கருதி ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று தற்போது மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.