அவகாசம் கேட்ட எய்ம்ஸ் குழு- விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகுமா?

 
a

 ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை குறித்த இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்திருக்கிறது. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்தது தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது . 

ஐ

 ஆறுமுகசாமி ஆணையம் இதுவரைக்கும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக 150-க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தி இருக்கிறது .  மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் அற்கு உதவுகின்ற வகையில்  மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.   கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவின்படி ஆறு பேர் கொண்ட மருத்துவ குழுவை நியமித்திருந்தது  எய்ம்ஸ்.  ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம்  ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.

 இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்களது இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதாக ஆறுமுக சாமி ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறது எய்ம்ஸ் மருத்துவக் குழு.  இது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ குழு அனுப்பி இருக்கும் விபரத்தில்,   ஆணைய விசாரணையில் இடம்பெற்று இருக்கும் மருத்துவர்கள் வெளிநாடு சென்று இருக்கிறார்கள்.  ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு தான் அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள்.  அதனால் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் இந்த அவகாசத்தால் ஆறுமுகசாமி  ஆணையத்தின் விசாரணை அறிக்கை மேலும் தாமதமாகலாம் என்று தெரிகிறது.