தமிழில் அர்ச்சனை செய்ய ஊக்குவிக்கப்படும்.. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு..

 
sekar babu


தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022 - 23 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.  அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு பல்வேருய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில்,  

அமைச்சர் சேகர் பாபு

“ அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனைக் கட்டத்தில் 60% பங்குத்தொகை தரப்படும்.  தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டண சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும்.

27 திருக்கோயிலைகளில் ரூ. 80 கோடியில் புதிய திருமணம் மண்டபங்கள் அமைக்கப்படும்.  ஒருகால பூஜை திட்டத்தில் நிதிவசதியற்ற மேலும் 2.000 கோயிலுக்கு அரசு மானியம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்..  

மயிலாப்பூர், நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் கோயில்களில் சிவராத்திரியன்று மாபெரும் விழா நடத்தப்படும்..

முக்கிய நகரங்களில் 52 வாரங்களுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும் .

தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு ரூ. 1 கோடி மதிப்பில்  மணிமண்டபம் அமைக்கப்படும், 3 நாள் அரசு விழா நடத்தப்படும் .

தமிழில் அர்ச்சனை செய்ய ஊக்குவிக்கப்படும்.. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு..

நகர்புறங்களில் அமைந்துள்ள 200 சிறிய திருக்கோயில்களுக்கு ₹20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்

தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாசார மையம் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படும்

1000 திருக்கோயில்களில் ₹500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பணிகள் ₹10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

தமிழில் அர்ச்சனை செய்ய ஊக்குவிக்கப்படும்.. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு..

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

 நாகை மாவட்டம் துளசியாப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஒளவையார் விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில், தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு ₹1 கோடி செலவில் மணிமண்டபம் அமைத்து அவரது பாடல்கள் கல்வெட்டாக பதிக்கப்படும் ” என்று  அறித்தார்.