முதலமைச்சர் ஸ்டாலின் மீது நடவடிக்கை பாயுமா? பாஜக கேள்வி

 
s

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது பாஜக.

 தமிழக சட்ட சபையில் ஆளுநர் நேற்று உரையாற்றியபோது அமைதி பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை , மத நல்லிணக்கம்,  திராவிட மாடல் ,தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்து தவிர்த்தார்.  இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன .

rs

தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது அவையில் சலசலப்பு ஏற்படுத்தின.   இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் சபை விதிகளை தளர்த்திக் கொண்டு ஆளுநருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.  இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வேகமாக வெளியேறி விட்டார்.  ஆளுநர் வெளிநடப்பு செய்த போது திமுக எம்எல்ஏக்கள் ‘வெளியே போ’ என்று கூச்சலிட்டார்கள்.

இதற்கு  தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும் போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ,உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்து கொள்ளப்பெறும்.

na

இதனடிப்படையில், நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும்.   அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?’’ என்று கேட்கிறார்.