கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கொன்ற கணவன்

 
murder

ஈரோட்டில் நேற்று மாலை கழுத்தை நெறித்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Crimes involving guns, machetes, and knives are on the rise in Ghana-BPS

ஈரோடு ஈ.பி.பி நகரை சேர்ந்தவர் சுரேஷ், தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி(38). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் 6 மாதங்களாக அவரது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். புவனேஷ்வரிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று குழந்தைகள் இரண்டும் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன் சத்திரம் போலீசார், படுக்கை அறையில் சடலமாக கிடந்த புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் புவனேஸ்வரியின் கணவர் மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில்  புவனேஸ்வரியை கொலை செய்தது அவரது கணவர் சுரேஷ் என்பது தெரியவந்தது.  கள்ளக்காதல் விவகாரம் மற்றும் வீட்டை விற்பனை செய்வது தொடர்பாக  இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சுரேஷ், புவனேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.