சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மழை!!

 
rain

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி பரவலாக மழை பெய்து வருகிறது.  அத்துடன் தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

rain

சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. கோயம்பேடு, வடபழனி ,மதுரவாயல், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, பெருங்குடி ,ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

rain

24 மணி நேரத்திற்கு சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுடன் , இன்றும், நாளையும் லட்சத்தீவு பகுதிகள் கேரளா கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் , குமரி கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா,  தமிழக கடலோர பகுதிகள் , தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் , ஆந்திரா -கடலூர் பகுதிகள் ,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி மத்திய கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.