சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை விமானத்தில் பயணிக்க மறுத்தது ஏன்? - வைகோ கேள்வி!

 
tn

சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை விமானத்தில் பயணிக்க மறுத்தது ஏன்? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

vaiko ttn

சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை விமானத்தில் பயணிக்க மறுத்தது ஏன்? வைகோ கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். 
(அ) சமீபத்தில் ஒரு உள்நாட்டு விமானத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தை அனுமதிக்கப்படவில்லையா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன?
(ஆ) குழந்தையை தவறாகக் கையாண்டதற்காக விமான நிறுவனம் தண்டிக்கப்பட்டுள்ளதா?
(இ) எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக சிவில் விமான போக்குவரத்து விதிகளில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட உள்ளதா?
(ஈ) அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, விமான நிலையப் பணியாளர்களுக்கும், விமானப் பணியாளர்களுக்கும் அத்தகைய சூழ்நிலைகளை சுமூகமான முறையில் கையாள்வதற்கான பயிற்சித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்குமா?
(உ) அப்படியெனில், அதன் விவரங்கள் என்ன?

vaiko ttn
வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் அவர்கள் 25 ஜூலை 2022 அன்று அளித்துள்ள பதில்:
(அ) மற்றும் (ஆ): 07.05.2022 அன்று ராஞ்சி - ஹைதராபாத் விமானத்தில், தனது பெற்றோருடன் பயணிக்க வந்த சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை, ஒரு விமான நிறுவனம் பயணிக்க மறுத்த நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், விமான நிறுவனத்தின் மீது ரூ. 5,00,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

(இ) முதல் (ஈ): விமான போக்குவரத்து விதிகள் (சிஏஆர்) பிரிவு 3 - விமானப் போக்குவரத்து, தொடர் M பகுதி IV இல், ஊனமுற்றோர் அல்லது குறைந்த நடமாட்டம் கொண்ட நபர்களின் போக்குவரத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆணை வழங்கி உள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய பயிற்சித் தொகுதியின்படி, பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து விமான நிலையப் பணியாளர்கள், விமான நிறுவனங்கள், பாதுகாப்பு பணியாளர்கள், சுங்கம் மற்றும் குடிவரவுப் அமைப்புகளின் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழங்கி உள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழாமல் இருக்க, 22 ஜுலை 2022 அன்று, சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரம் (DGCA), தொடர்புடைய விதிகளை திருத்தி அமைத்துள்ளது.