அதிமுக அலுவலக சாவியை இன்னும் பழனிசாமியிடம் ஒப்படைக்காதது ஏன்?

 
admk office

கோட்டாட்சியர் உத்தரவு வந்ததும், நாளை காலை 10 மணியளவில் அதிமுக அலுவலகம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu CM Edappadi K Palaniswami may launch river interlink work |  Chennai News - Times of India

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த ஜுலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர்  மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள தெருவில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும் அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்-இடம் ஒப்படைக்க அறிவுறுத்தியது. ஆனால் இன்னும் சீல் அகற்றப்படவில்லை. சாவியும் ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் அருகே வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4 மணியளவில் நீதிமன்ற தீர்ப்பு நகலை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.  கோட்டாட்சியர் இதுகுறித்து எதுவும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என வட்டாட்சியர் தெரிவித்தார். கோட்டாட்சியர் உத்தரவு வந்ததும், நாளை காலை 10 மணியளவில் அலுவலகம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் சென்றபோது கோட்டாட்சியர் இல்லை என்றாலும் எங்கள் மனுவை பெற்றுக்கொண்டதற்கான அக்னாலேஜ்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக மேனேஜர் மகாலிங்கம் எங்களுடன் வந்திருந்தார் என தெரிவித்தார்.