ஆளுநர் ஏன் டெல்லி சென்றார்? ஜெயக்குமார் பரபரப்பு

 
j

குடியரசு தலைவரிடம் திமுக  ஆளுநர் மீது புகார் அளித்து இருப்பதால் அது குறித்த விசாரணைக்காகவே ஆளுநர் டெல்லி சென்றிருப்பதாக திமுகவினர் சொல்லி வரும் நிலையில் அது காரணம் அல்ல வேறு காரணம் என்று விளக்குகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

 சென்னையில் மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் அதிமுக இல்லாத திருமண விழாவில் பங்கேற்றார்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.  அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

எ

இந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசினார் ஜெயக்குமார் .  அப்போது,   ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியது கடும் கண்டனத்திற்கு உரியது.   கோபத்தை விட்டு முதல்வர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 சிலர்  பத்திரிகையாளர்களில் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள் என்று அண்ணாமலையை மறைமுகமாக தாக்கினார்.

ஆளுநர் ரவி டெல்லி சென்று இருப்பது குறித்த கேள்விக்கு,   குடியரசுத் தலைவரிடம் திமுக அளித்த புகாரின் பேரில் அந்த விசாரணைக்காகத்தான் ஆளுநர் டெல்லிக்கு சென்றிருப்பதாக திமுக தரப்பில் பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதால் இது குறித்து பேசுவதற்காகத் தான் ஆளுநர் டெல்லி சென்று இருக்கிறார் என்றார்.

 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று ஓபிஎஸ் சொன்னது குறித்த கேள்விக்கு,   சசிகலா- தினகரன் -ஓபிஎஸ் மூன்று பேரும் ஒன்று பட்டால் அவர்களுக்குத் தான் வாழ்வு. தமிழக மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லையே என்றார். மேலும் பொதுக்குழுவால் நீக்கப்பட்ட சசிகலாவும் தினகரனும் பன்னீர்செல்வமும் மூன்று பேருக்கும் மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.