கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு அண்ணாமலை ஏன் நீதிகேட்கவில்லை ? - கே. பாலகிருஷ்ணன்..

 
K balakrishnan

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  ஏன் நீதி கேட்கவில்லை ? என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.  

 கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு அண்ணாமலை ஏன் நீதிகேட்கவில்லை ?  - கே. பாலகிருஷ்ணன்..

கள்ளக்குறிச்சியில்  நடைபெற்ற  தனியார் கூட்டரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாணவி ஸ்ரீமதியின் இறப்பிற்கு ஏன் குரல் கொடுக்காமல் இருக்கிறார். மாவட்ட ஆட்சியரின் மாவட்ட நிர்வாகத்தையும் மாற்றியதற்கு அரசாங்கம் நாடகம் ஆடுகிறது என கூறும் அண்ணாமலை, அப்போது இதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இன் பங்கு இருப்பதால் தான்  இந்த ஒட்டுமொத்தமான பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கிறது.  எனவே தமிழக அரசு  மாணவியின் உயிரிழப்பிற்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து அவர்களை கைது  செய்ய வேண்டும். மாணவியின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்திருக்கிறேன்.  

annamalai
 
மேலும், கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதிஅன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  மேலும் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை நியாயமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் . எத்தனை நாட்கள் கால அவகாசம்  வேண்டுமோ அதை  கேட்டு அந்த விசாரணை முழுமைப்படுத்த வேண்டும்.   இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பள்ளியில் படிக்கும் 3,400 மாணவர்களின் கல்வியை தமிழக அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். அந்த பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் இந்த வழக்கு முடியும் வரையில் அரசு தலையிட்டு நடத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்..