கோவையில் எங்கு பார்த்தாலும் அடக்குமறை, வன்முறை, பாலியல் வன்முறை- தமிழ்மகன் உசேன்

 
Thamizh Magan Hussain press meet

கோவை குனியமுத்தூர் ஹஜ்ரத்  நூர்ஷா அவுலிநா தர்காவில் அதிமுக சார்பில்  எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி  மீண்டும் அமைந்திட சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். சிறப்பு வழிபாட்டிற்கு பின்பு தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

tamil magan hussain, அதிமுக அவைத் தலைவர்: ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த  எடப்பாடி! - background of the appointment of tamil magan hussain as the  interim presidium chairman of the aiadmk - Samayam Tamil

அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளராக வேண்டியும், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில் , மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என வலியுறுத்தியும் அதிமுகவின் 75 மாவட்டங்களில் உள்ள 70 தர்காகளில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 39 வது மாவட்டமாக கோவை மாவட்டம் வந்துள்ளது, மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிராத்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி  வரவேண்டும். 

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அதிமுகதான்,
ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றிக்கும் , மெக்கா , மதினா செல்லவும் , இஸ்லாமியர்  வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அதிமுக செய்து இருக்கின்றது. கோவைக்கு  திமுக ஆட்சியில் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை, எங்கு பார்த்தாலும் அடக்குமறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடக்கிறது.கோவையில் பல இடங்களில்  சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கின்றது. அதிமுக  இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு மதம், சாதி கிடையாது. பாபுஜி சாமிகள் நமக்கு சித்தப்பாதான். துவா நிகழ்வில் பாபுஜி சாமிகள் கலந்து இருக்கின்றனர். ஆன்மீக பயணமாக வந்திருப்பதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க  விரும்பவில்லை.” என்றார்.