அட்சய திருதியை நாளில் இந்த பொருட்களையும் வாங்கலாம்!!

 
tn

அட்சய திருதியை  தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

gold

குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.  இன்றைய நாளில் கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌. சுக்கிரன்‌ ஆசி நிறைந்த செவ்வாய்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்‌.

gold

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

gold

இந்நிலையில் அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் காலை 05:48  - இரவு  12 : 06 மணிவரை தங்கம் வாங்க உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு பகவான்.  குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கும் நிலையில், அட்சய திருதியை நாளில்‌ பொன்‌ வாங்குவது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.குறிப்பாக மங்கள பொருட்கள் வாங்க  காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரையும்,  
நண்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரையும் , மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரையும் , இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையும்  என்று சொல்லப்படுகிறது.