"முதல்வர் பேசாமல் இருந்திருந்தால் மாநிலத்திற்கே தலைகுனிவாகி இருக்கும்" - கே.பி. முனுசாமிக்கு அப்பாவு பதிலடி!!

 
appavu

முதலமைச்சரால் தமிழ்நாடு மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவையின் மாண்பும் காப்பாற்றப்பட்டது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

appavu
ஆளுநர் உரைக்குப் பிறகு முதலமைச்சர் பேசிய விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏ கே.பி. முனுசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.  பேரவையில் உரையாற்றி ஆளுநர் அமர்ந்த பின் முதல்வர் பேச அனுமதித்திருக்கக் கூடாது என்று அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , முதல்வர் பேசாமல் இருந்திருந்தால் மாநிலத்திற்கே தலைகுனிவாகி இருக்கும். ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கும். 

tn

ஆளுநர் உரையில் இல்லாத அம்சங்களை பேசிய போது சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். அவர்களின் முதலமைச்சர் அமைதிபடுத்தினார். அவையின் மாண்பை காப்பதில் உறுதியுடன் செயல்பட்ட முதலமைச்சர் பேரவையின் சார்பில் நன்றி.  ஆளுநர் பேசும்போது அசாதாரண சூழல் சட்டப்பேரவையில் ஏற்பட்டது மிகவும் மதிநுட்பத்துடன் செயல்பட்ட முதலமைச்சரால் தமிழ்நாடு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவையின் மாண்பும் காப்பாற்றப்பட்டது.  ஆளுநர் உரையில் குளறுபடிகள் இருந்தது; உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் கடமை.உள்ளே இருக்கும் வரிகளுக்கு அரசே பொறுப்பு; அவர் அதை கடந்து சென்றதால் அசாரணசூழல் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல . ஆளுநர்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என எடுத்துக்காட்டும் வகையில் தீர்மானம் இருந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும் எம்எல்ஏக்கள் விதிமுறைகளை பின்பற்றி கண்ணியத்துடன் பேச வேண்டும்" என்றார்.