“10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை ஓட வைத்திருக்கிறோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

 
tn

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பதில் உரை வழங்கி வருகிறார்.  அப்போது பேசிய  அவர்,  "பெரியார் ,காமராஜர் ,அண்ணா ,கருணாநிதி கொள்கைகளை செயல்படுத்துவதே திராவிட மாடல்.  சமூக நீதி தத்துவமே திராவிட இயக்கத்தின் அடிப்படை . தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.  வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல;  சமூக வளர்ச்சியும் அடங்கியது . திராவிட மாடல் ஆட்சியின் பயணம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

tn

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது.  கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையின் போது நடந்ததை மீண்டும்  பேசி அரசியலாக்க விரும்பவில்லை. மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது.  அதுவே மக்கள் மனதை வென்றது.  காலம் குறைவு ; ஆனால் ஆற்றி உள்ள பணிகள் அதிகம்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமும் இன்றி ஆட்சி செய்து வருகிறோம். இதுவே திராவிட மாடல் ஆட்சி. 20 மாதங்களில் நாம் கடந்த காலம் குறைவு.  ஆனால் பல சாதனைகளை செய்திருக்கிறோம்.  திராவிட ஆட்சி வீரத்துடன் , விவேகத்துடன் நடக்கிறது என்பதை இந்தியாவே  இப்போது உணர்ந்து விட்டது. 

tn

சமூக நீதி, சுயமரியாதை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கவனிக்கும் அரசு இது.  அனைவரும் சமம் என்ற கொள்கையை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி இது.  கடந்த பத்து ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை ஓட வைத்திருக்கிறோம்.  தொழில் வளர்ச்சி,  சமூக மாற்றம் , கல்வி மேம்பாடு ஆகியவை ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சி என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு . காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நாள்தோறும் உதயசூரியன் உதிக்கிறது. கடந்த ஓராண்டில் 655 நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன்.  அதில் 555 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள்.  இடர்பாடுகள் இல்லாமல் இருந்திருந்தால் கூடுதலாக 50 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன். 9000 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். தமிழக மக்களின் நலன் என்றால் சொல்லாதையும் செய்வோம், சொல்லாமல் செய்வோம் இது தான் என் முழக்கம்.  ஒட்டுமொத்த தமிழகமும் உயர்ந்திருப்பதை அனைவராலும் பார்க்க முடிகிறது. மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பைக் காக்கவும், ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன். கருணாநிதியின் மகன் மு.க.  ஸ்டாலின் என்பதை நிரூபித்து காட்டிய தினம் ஜனவரி 9. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை " என்றார்.