அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!!

 
tn

அமராவதி,  மணிமுத்தாறு அணையிலிருந்து  பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. 

tn

திருப்பூர் மாவட்டம், இராமகுளம் மற்றும் கல்லாபுரம் பழைய வாய்க்கால்களின் இரண்டாம் போக பாசன காலத்தை 01.05.2022 முதல் 15.05.2022 வரை நீட்டித்து (10 நாட்கள் தண்ணீ ர் திறப்பு 5 நாட்கள் அடைப்பு) என்ற அடிப்படையில் தகுந்த இடைவெளி விட்டு 43.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 2834 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

tn

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு 01.05.2022 முதல் 28.08.2022 வரை 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்குகல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் சுமார் 2756.62 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும் என்று நீர்வளத்துறை அறிவித்துள்ளது.