சாதி அடையாள கயிறுகள் அணியக்கூடாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை

 
student

சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கயிறுகளை மாணவர்கள் கட்டக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

கயிறும், திலகமும் சாதி அடையாளமா? -வலுக்கும் எதிர்ப்பும், அமைச்சர் பதிலும்!!!

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள நினைவூட்டல் சுற்றறிக்கையில், 2019ம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் பொழுதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது. 

எனவே, மாணவர் நலன் கருதி தலைமையாசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறிடுமாறும், அவ்வாறு சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரித்திடுமாறும் இவ்வகையான கயிறு அணிவதை தடுக்குமாறும் அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.