’பொருட்களே வாங்காமல் வாங்கிவிட்டதாக மெசேஜ்’ ரேசன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

 
ration shop

நியாய விலை கடைகளில் வழங்கப்படாமல் வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தால் நியாய விலை கடை விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கையும், அடுத்த கட்டமாக புகார் நிரூபிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

19 groceries items for rs 500 to be sale in ration shop tn govt decides  183318 - 19 வகையான மளிகைப் பொருட்கள் - ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு  முடிவு | Indian Express Tamil

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை சங்க பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் POS கருவிகள் நிறுவப்பெற்று Biometric முறை மூலம் கட்டுப்பாட்டுப் பொருட்களும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாக மக்கள் Portal TN என்னும் இணையதளத்தில் புகார்கள் வரப்பெறுகின்றன. 

இவ்வாறு வழங்கப்படாத குறுந்தகவல் பெறப்பட்டதாக புகார்கள் பொருட்களுக்கு வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கள் மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு புகார்களில் குறிப்பிட்ட முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்க அறிவுறுத்தி அவற்றைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.