'உட்காருடா' என்று ஒருமையில் பேசிய அமைச்சர்...அதிமுக வெளிநடப்பு!!

 
tn

அமைச்சர் பெரிய கருப்பனின் பேச்சை கண்டித்து அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

tn

இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், "அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது,  அமைச்சர் பெரியகருப்பன் உட்காருடா என்று மரியாதை குறைவாக பேசினார். அவர் சற்றும் மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தினால் அமைச்சர் பெரியகருப்பனை  கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

ops

தொடர்ந்து பேசிய அவர்,  துணைவேந்தர் நியமனம் மசோதா குறித்து சட்டமன்றத்தில் பேசப்பட்டுள்ளது . இதுவரை யாரும் சட்ட முன்வடிவு  கொண்டு வந்து நிறைவேற்ற வில்லை.  சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு திமுக இரட்டை வேடம் போடுகிறது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.  அதற்கு உட்பட்டு தான் அவர் செயல்பட முடியும்.  அதற்குப் புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.  ஆளுநர்கள் தான் துணைவேந்தர்களை  நியமிக்க வேண்டும். ஆனால் பல்வேறு கருத்துகள் உள்ளன. முகக்கவசம் அணியாவிட்டல் ரூ.500 அபராதம் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முகக்கவசம் அணியவில்லை. அரசின் அறிவிப்பு அனைவருக்குமானதா? எம்எல்ஏக்களுக்கு இல்லையா? என்றார்.  ஆனால் அதிமுக வெளிநடப்பு குறித்து கருத்து தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் விவகாரத்தில் வெளிநடப்பு செய்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் காரணம் தேடி அ.தி.மு.க வெளிநடப்பு செய்திருக்கிறது என்று விமர்சனத்தை முன்வைத்தார்.