பிக் பாஸ் விக்ரமனுக்கு வாக்களியுங்கள் - திருமா கோரிக்கையும், வனிதா எதிர்ப்பும்...!!

 
tn

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.  பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அசிம், ஷிவின்,  மைனா நந்தினி, அமுதவாணன் உள்ளிட்டோ இடம்பெற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பொங்கல் சிறப்பு நிகழ்விற்காக விஜய் டிவி பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.  அதில் தொகுப்பாளினி டிடி சென்றிருந்தார்.  டிடியும் விக்ரமனும் உரையாடிக் கொண்டிருக்கும்போது இன்று பொங்கல் என்பதை தாண்டி நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள் என்று விக்ரமன் தெரிவித்தார்.  கடந்த 100 நாட்களாக வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தமிழ்நாடு பெயர் உருவான வரலாறு விக்ரமன் கூற,  நீங்கள் தெரிந்து சொல்கிறீர்களா? இல்லை தெரியாமல் சொல்கிறீர்களா என்று திவ்யதர்ஷினி உள்பட பார்வையார்களுக்கும் ஒரே ஆச்சரியம் தான்.

tn

என்றைக்கும் தமிழ்நாடு தமிழ்நாடு தான் வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது என்று திவ்யதர்ஷினி தெரிவித்தார்.  தமிழ்நாடு பிரச்னை குடியரசுத் தலைவர் வரை சென்றுள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டிலும்  தமிழ்நாடு பெயருக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்று  விக்ரமனுக்கு ஆதரவாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.  விக்ரமனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று  பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

tn

இந்நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் , பிக் பாஸ் -இல் நடைபெறும் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். #ஹாட்ஸ்டார் வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம். என்று கோரிக்கை விடுத்துள்ளார். விக்ரமன் விசிக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் நடிகை வினிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக மதிப்புக்குரிய ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்பியுமான திருமாவளவன் எப்படி வாக்கு சேகரிக்கலாம்.  



பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்து டைட்டில் வின் பண்ணுவது தான். இதுவரை கேமாக இருந்தது. ஆனால், இப்போ இது பக்கா பொலிட்டிகல் பிளேயாக மாறிவிட்டது. அவங்க கட்சிக்காரருக்கு ஆதரவா அவரு ட்வீட் போட்டு இருக்காரு. அரசியல் நோக்கத்திற்காக கமல் ஹாசன்  தனது கட்சிக்கோ வேட்பாளருக்கோ,  வாக்களிக்கவோ அல்லது தனது கட்சிப் போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ கேட்கவில்லை. விக்ரமன் வெற்றி பெற்றால் அதற்கு  அரசியல் ஆதரவும், சமூக ஆதரவும்  மற்றும் பார்வையற்றவர்களின் வாக்குகளுக்காக தான் இருக்கும் என்று ட்வீட் செய்துள்ளார்.