சத்துணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

 
school

நாகர்கோவில்  பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 26 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்புக: மாவட்ட  ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு - KALVISEITHI ...

நாகர்கோவில் கோட்டாறு கவிமணி மேல்நிலைப் பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  பள்ளி ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர்கள் உடல்நிலை தேறி உள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று மாணவிகளை பார்த்து அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். மருத்துவக் கல்லூரி அதிகாரி தலைமையில் மருத்துவர் குழு ஒன்று அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது அவர்கள் உடல்நிலை  தேறி உள்ளதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி விடுபவர்கள் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்