ஆய்வகத்தில் இருந்த உப்பை சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

 
student

கிருஷ்ணகிரி அருகே ஆய்வகத்தில் இருந்த உப்பை சாதரண உப்பு என நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

students

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த மோரனஹள்ளியில் அரசு மேல்நிலை இயங்கி வருகிறது. இதில் சுமார் 950 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவர்கள் ஆய்வகத்தில் உள்ள உப்பை சாதாரண உப்பு என நினைத்து சாப்பிட்டதில் 11 மாணவர்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆய்வகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ள மெக்னீசியம் பாஸ்பேட்,மற்றும் பெரீக் குளோரைடு ஆகிய இரண்டையும் மாணவர்கள் சாதாரண உப்பு என நினைத்து சாப்பிட்டதால் சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் தற்போது நலமுடம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.