எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் கைது

 
tn

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

sp velumani

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நேரத்தில் வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் எஸ் பி வேலுமணி ரூபாய் 500 கோடி ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில்  சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

tn

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் போலீசார் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை  தொடர்ந்து  ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச்  சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதால் கைது என தகவல் வெளியாகியுள்ளது.