விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு- 4 பேரில் ஒருவரை விடுவிக்க திட்டம்

 
குற்றவாளிகள்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4  பள்ளி மாணவர்களில் ஒருவரை வழக்கிலிருந்து சிபிசிஐடி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேர் மீது குண்டர் தடுப்புச்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை | Virudhunagar teen sexual abuse case: Action  against 4 persons ...

விருதுநகரில்  இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு 4 பேரை சிபிசிஐடி காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், அவரது பெற்றோர், கைது செய்யப்பட்ட நபர்களின் பெற்றோர் உறவினர், நண்பர்கள் என  விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் சிபிசிஐடி காவல்துறை ஈடுபட்டு வருகிறது

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவரான பள்ளி மாணவர் மீது குற்றம் செய்ததற்கான எந்த  முகாந்திரமும் இல்லை என்று கூறப்படுகிறது. ஒரே ஒரு பள்ளி மாணவரை மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 7 பேருக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஒரு சில தினங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சிபிசிஐடி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.