விருதுநகர் வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..

 
CM

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று (27.7.2022) பிற்பகல் சுமால் 3.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது.

வில்லிவாக்கம் தொழிற்சாலையில் கெமிக்கல் பேரல் வெடித்து விபத்து..

இந்த விபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இதே விபத்தில் கடும்காயமடைந்த விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானீஸ்வரனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக அரசு

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சமும் மற்றும் கடும் காயமடைந்த பவானீஸ்வரனுக்கு ரூபாய் ஒரு இலட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.