ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி!!

 
tn

 ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்றுவிருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

tn

அந்த அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் 2,02,496 சதுர அடி பரப்பளவில் ஆறு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் தரைத்தளத்தில், அஞ்சலகம், பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேர்தல்பிரிவு அலுவலகம் மற்றும் நன்கு சக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும், முதல் தளத்தில் வாகன நிறுத்தம், தொழிலகப் பாதுகாப்புத்துறை, குற்ற வழக்குகள் பதிவுத்துறை, புள்ளியல் துறை அலுவலகங்களும், இரண்டாம் தளத்தில் தேசிய தகவலியல் மையம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்டக் கருவூலம் மற்றும் இரண்டு துணை ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியவையும், மூன்றாம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் (கலால், முத்திரை, சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி), ஆதிதிராவிடர் நலத்துறை, தணிக்கை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலகங்கள் ஆகியவையும், நான்காம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்ட அரங்குகள், காணொளிக் கூட்ட அரங்கு, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை, இரண்டு துணை ஆட்சியர்கள் மற்றும் பயிற்சி ஆட்சியர்கள் அலுவலகங்கள் ஆகியவையும், ஐந்தாம் தளத்தில் அவசர கால உதவி மையம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம், (நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தொழிற்பேட்டை) உதவி இயக்குநர் மருந்துக்கட்டுப்பாடு மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவையும், ஆறாம் தளத்தில் துணை இயக்குநர் (சுரங்கம்), மகளிர் நலன் மேம்பாட்டு, உதவி இயக்குநர் நிதி மற்றும் தணிக்கை , மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்கள் இக்கட்டடத்தில் செயல்படும்.