விநாயகர் சதுர்த்தி : பிரச்சனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - ஆவடி கமிஷனர் எச்சரிக்கை..

 
ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

விநாயகர் சிலை

 இதுகுறித்து  ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், “ஆவடி காவல் ஆணையரக எல்லையில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் தனி நபர்கள் இன்று விநாயகர் சிலைகளை நிறுவியுள்ளனர். ஆவடி காவல் மாவட்டத்தில் 286 விநாயகர் சிலைகளும், ரெட்ஹில்ஸ் காவல் மாவட்டத்தில் 217 விநாயகர் சிலைகளும் என மொத்தம் 503 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பொது அமைதி நிலை நாட்டவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கவும் சுமார் 3,200 காவல் துறையினர் பணிக்காக ஒருங்கினைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை

  சந்தீப் ராய் ரத்தோர்,  ஆவடி காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையகம். அவர்கள் சட்டம் & ஒழுங்கிற்கு இடையூறு செய்பவர்கள், அடிக்கடி பிரச்சனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அமைப்பாளர்களும் அரசின் பல்வேறு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ”