"விநாயகர் சதுர்த்தி" திருநாள் - ஓபிஎஸ் நல்வாழ்த்து!!

 
Ops

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.

ops

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் ஆலயங்களில் விநாயகருக்கு சிர்பூ அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஓம் எனும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடவுளாகிய விநாயகர் சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்லவர். அவரை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்த காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும். விநாயக பெருமானின் அருளால் அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும் அமைதியும் நிலவட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.