நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த விழுப்புரம் மாணவி

 
student

தமிழக அளவில் நீட் தேர்வில் 7.5  சதவீத இட ஒதுக்கீட்டில் 467 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார் விழுப்புரம் மாணவி பிருந்தா. விழுப்புரம் அடுத்த வளவனூர் உண்டு உறைவிடப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து நான்கு பாடத்தில் 200 க்கு 200 எடுத்து 600 க்கு 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நீட் தேர்விலும் 467 மதிப்பெண் பெற்றுள்ளார் பிருந்தா. இது அரசு பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீடு பிரிவில் முதலிடம் ஆகும்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மாணவியின் தந்தை இறந்த நிலையில், இவரின் தாயார் பால் கடையில் வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார். தற்போது அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 467 மதிப்பெண் பெற்று 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவியை ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் பாராட்டிவருகின்றனர்.

இதேபோல் சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து 576 மதிப்பெண்கள் எடுத்த சுந்தராஜன் எனும் மாணவர் நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். 

இவரின் தந்தை தனியார் நிறுவன ஊழியராக உள்ள நிலையில் வீட்டின் மாடியில் உள்ள ஓலை குடிசையில் தான் பெரும்பாலும் படித்துள்ளார். நீட் வகுப்பிற்கு சென்ற நிலையில் அங்கும் சரியாக சொல்லி தரவில்லை என கூறும் சுந்தராஜன், மனப்பாடம் செய்ய கூறியதால் நின்று விட்டு தானே தனியாக படித்துள்ளார்.