விகடன் குழும இயக்குனரின் தாயார் மறைவு - மு.க.ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்..

 
eps stalin


விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர்   சீனிவாசன் அவர்களது தாயார்  சரோஜா பாலசுப்ரமணியன் மறைவுக்கு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. சீனிவாசன் அவர்களது தாயாரும் அமரர் பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்றறிந்து  வேதனை அடைந்தேன்.  அன்பு அன்னையை இழந்து தவிக்கும் திரு. சீனிவாசன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் குழும இயக்குனரின் தாயார் மறைவு - மு.க.ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்..

இதேபோல்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,"விகடன் குழும தலைவர், திரு.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா பாலசுப்பரமணியம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , விகடன் குழுமத்திற்கும் அ.தி.மு.க சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.