தொப்பூா் கணவாய் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விஜயகாந்த் கோரிக்கை!!

 
vijayakanth

தொப்பூா் கணவாய் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுக்குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயின் வழியாக தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. தொப்பூா் கணவாய் பகுதியில் உள்ள சாலை வளைந்து நெளிந்து செல்கிறது. இதனால் அவ்வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குவதுடன், உயிரிழப்பும் ஏற்படுகிறது.

vijayakanth

 கடந்த 2019ம் ஆண்டில் தொப்பூர் கணவாயில் நடந்த 57 விபத்துகளில் 23 பேர் உயிரிழந்தனர். 2022ல் நடந்த 50 விபத்துகளில் 9 பேர் பலியாகினர்.  சாலை விபத்துக்களை தடுப்பதற்கு தொப்பூர் கணவாய் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி எனது ஆணைக்கிணங்க தர்மபுரியில் தேமுதிக சார்பில் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

tn govt

இந்த நிலையில்   தொப்பூர் கட்டமேட்டில் இருந்து, தொப்பூா் ரயில்வே இரட்டை மேம்பாலம் வரை ரூ.370 கோடி மதிப்பிட்டில் 8 கி.மீ., தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.