‘வாரிசு’ வெற்றிக்கு 108 தோப்புக்கரணம் போட்டு வழிபாடு செய்த விஜய் ரசிகர்கள்

 
varisu

தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் வாரிசு படம் வெற்றி அடைய வேண்டிய மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு நூதனப் பிரார்த்தனையில் ஈடுபட்ட  விஜய் ரசிகர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வாரிசு’ வெற்றிக்கு, விஜய் ரசிகர்கள் 108 தோப்புக்கரணம்!

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்னும் இரு தினங்களில் திரையிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இன்று விஜய் ரசிகர்கள் மயூரநாதர் அபயாம்பிகை அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கி  படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.


வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.