“விஜய் - அஜித் படங்களை ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது”

 
thunivu and varisu

பொங்கலுக்கு ரிலீஸாகி போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

thunivu vs varisu

அஜித்தின் `துணிவு' மற்றும் விஜய்யின்`வாரிசு' படங்களில் எது வசூலில் நம்பர் ஒன், யார் சூப்பர் ஸ்டார் என்கிற சர்ச்சை ரேஸும் கூடவே ஓடிக்கொண்டிருக்கிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.ஆனால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசும் துணிவு படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன், “நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.