விஜய் அழைப்பு - திரண்டு வந்த மக்கள் இயக்க நிர்வாகிகள்

 
வ்

நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்த வருகிறார்.   இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடந்து வருகிறது.  ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார் விஜய்.   இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரை அழைத்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. 

ப்

 வரும் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த வரும் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.  இப்படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் அஜித் நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.   இந்த போட்டியை சமாளிக்க  இரு தரப்பினருமே தயாராகி வருகிறார்கள் .

இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய உடனே விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார் .  அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின்  பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் மற்றும் பகுதி தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

வி

 சென்னை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது.    மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடந்திருப்பதாக தகவல்கள்.   ஆனால் வாரிசு திரைப்படம் துணிவு திரைப்படம் ஒரே நாளில் திரைக்கு வரும் நிலையில் இந்த போட்டியை சமாளித்து இதில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்துதான் இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

 விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார் விஜய்.   இந்த இயக்கத்தினர் தேர்தல்களில் சந்தித்து வெற்றியும் பெற்று வருகின்றனர் . அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க இருக்கிறார்கள் விஜய்யும் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவிருக்கிறார் என்று பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது பரவி வருகிறது.   இந்த நிலையில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது.