மாணவி ஸ்ரீமதி தற்கொலையில் இறப்பு குறித்த வீடியோ! நீடிக்கும் பதட்டம்

 
sr

மாணவி ஸ்ரீமதியின் தற்கொலையால் கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.  மாணவியின் இறப்பு குறித்து அவரது தாயார் வெளியிட்டிருக்கும் வீடியோ மேலும் பதட்டத்தை கூட்டியிருக்கிறது.  இதனால்  300க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அருகே உள்ள கன்னியாகுமரி பகுதியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.   இப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசவுர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்கிற 17 வயது சிறுமி பிளஸ் டூ படித்து வந்திருக்கிறார்.  நேற்று அவர் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்திருக்கிறது.  

sr

 ஆனால் பெற்றோர்,  தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.   ஐந்து முறைக்கு மேலாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 பள்ளியின் முகப்பு பகுதியில் இருக்கும் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு  நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.  ஆனாலும் அப்பகுதியில்  தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.

 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதி உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.  இதனால் அங்கே அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  

 இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாணவியின் தாயார் ஸ்ரீமதியின் இறப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  மாணவியின் பிரேத பரிசோதனையின் போது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாக்க கூடிய அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.  தொடர்ந்த அப்பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.