ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

 
senthil balaji

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்  கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " புதிய மின்சார திருத்த சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளிவந்த செய்திகள் தவறானது . ஆதாருடன் மின் அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும்" என்றார். 

senthil balaji

தொடர்ந்து பேசிய அவர் , "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறோம் என பொருத்திருந்து பாருங்கள். முதலமைச்சரின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்" என்றார்.

senthil balaji

முன்னதாக  தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக களம் காண்பது தான் சிறந்த தீர்வு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.