வயிற்று வலிக்கு ஊசிப் போட்டவர் பலி

 
Death

ராசிபுரம் அடுத்த திம்மநாய்க்கன்பட்டி பகுதியில் இயங்கிவரும் சக்தி ஹோமியோபதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற ஆவின் பால் சொசைட்டி பணியாளர் பரிதாப பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சின் - பக்க விளைவுகள் என்ன? கொரோனா தடுப்பூசி போட்டபின்  உடலில் என்னாகும்? - BBC News தமிழ்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்கிலிகோம்பை அருகே வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காங்கமுத்து(39). இவர் அதே பகுதியில் உள்ள ஆவின் பாலக சொசைட்டியில் பணியாளராக  உள்ளார். இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில் சிங்கிலிகோம்பை அருகே வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (39 இவர் இதே பகுதியில் வாழப்பாடி சாலையில் சக்தி ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருகிறார். காங்கமுத்து நேற்று காலை 9.30  சக்திவேலின் கிளினிக்கு வயிற்று வலி என சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதற்கு ஹோமியோபதி மருத்துவர் ஊசி போட்டு மாத்திரை கொடுத்தாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காங்கமுத்துக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக ஹோமியோபதி மருத்துவர் சக்திவேல் ஆம்புலென்ஸ் மூலம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கிருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டுச் சென்றனர். பரிசோதனையில் காங்கமுத்து ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, மங்களபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.