மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவு - நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

 
rangaraj and rajini

மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

rangaraj father

மூத்த பத்திரிக்கையாளரும், சாணக்கியா ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று இரவு காலமானார். இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் உள்ள ரங்கராஜ் பாண்டே இல்லத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அவரது தந்தையின் மறைவிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

rajini

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ரங்கராஜ் பாண்டேவின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து ரங்கராஜ் பாண்டேவை சந்தித்து அவரது தந்தையின் இறப்புக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் பல்வேறு தலைவர்களும் ரங்கராஜ் பாண்டேவின் தந்தையின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.