"என் சாவுக்கு காரணம் திமுக கவுன்சிலர் தான்" - தூக்கில் தொங்கிய ஊராட்சி செயலாளர் - சிக்கிய பரபரப்பு கடிதம்!!

 
tn

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகர் இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அத்துடன் அவர் தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் , மனைவி காந்திமதி என்னை மன்னித்துவிடு ;நான் உன்னை விட்டு போகிறேன்; குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்.   இந்த முடிவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரி தான் காரணம் ; வேறு யாரும் காரணம் இல்லை என்று எழுதியிருந்தார்.

Death

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்,  ராஜசேகரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில்,   ஊராட்சிக்கு வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும்,  ராஜசேகர் தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி , பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் , பணத்தை திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.  

tn

இதனால் ஊராட்சி செயலாளர் ராஜசேகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதுகுறித்து வேப்பங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுன்சிலர்  தொல்லையால் கிராம ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.