வன்னியர் இடஒதுக்கீட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவுநாள் - பாமக வீரவணக்கம்!!

 
tt

1987 அனைத்து சமூகங்களுக்கும் வகுப்புவாரி உரிமை, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, மருத்துவர் அய்யா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்,  21 பேர் உயிரிழந்தனர். 

ttn

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் , வன்னியர் இடஒதுக்கீட்டுப் போரில் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 35ஆவது நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையில்லை. அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 35-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும்  வணங்குகிறேன்... போற்றுகிறேன் ! பாட்டாளி மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற  வேண்டும் என்பது தான் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் இன்னுயிர்  ஈந்ததன் நோக்கம்.  அந்த நோக்கத்தை நிறைவேற்ற மருத்துவர்  அய்யா அவர்களின் வழியில்  நாம் அனைவரும் உழைப்போம்.... வெற்றி பெறுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.