பேரவையில் ஆண்களை அசிங்கப்படுத்திய வானதி சீனிவாசன்! கொந்தளித்த சபாநாயகர்

 
vanathi

பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும், ஆண்கள் கையில் காசு இருந்தால் அது சிகிரெட், டாஸ்மாக் ஆகியவற்றுக்குதான் செல்லும் என வானதி சீனிவாசன் பேசியதால் கேள்வி நேரத்தில் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இன்று சட்டப்பேரவையில்ல் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்து பேசினார். இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார்.

கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மகளீர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து பேசினார். அப்போது பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்பத்தின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் கல்விக்கும் உதவும் என்றும், அதே நேரம் ஆண்களின் கையில் இருக்கும் பணம் பீடி, சிகிரெட், டாஸ்மார்க் ஆகிய இடங்களுக்குதான் செல்லும் என்று குறிப்பிட்டு பேசினார்,

இதற்கு அவையில் இருந்த பெரும்பாலான திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், எல்லா ஆண்களையும் நான் குறிப்பிடவில்லை ஒரு சிலர் அவ்வாறு இருப்பதாக பேச்சை மாற்றினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஆன்லைன் விற்பனை குறித்து மட்டும் பேசுங்க மா என்றார். இதையடுத்து பேரவையில் சிரிப்பலை எழுந்தது.